டெல்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சித்ரா சிங் என்ற முதுகலை மாணவி, தன் மீது சுமத்தப்பட்ட ‘கல்வித் துன்புறுத்தல்’ குறித்துப் பதிவிட்ட இன்ஸ்டாகிராம் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளன.
ஒரு பேராசிரியரின் தவறான நடத்தையை அம்பலப்படுத்தி இவர் ரீல்ஸ் வெளியிட்ட பிறகு, துறைத் தலைவர் (HOD) தன்னை அழைத்து மிரட்டியதாகச் சித்ரா சிங் குற்றம் சாட்டியுள்ளார்.
தனது வீடியோக்களை நீக்கவில்லை என்றால், “உன்னுடைய வாழ்க்கையை நாசமாக்கிவிடுவோம்” என்று துறைத் தலைவர் மிரட்டியதாகவும், அதனால் தனது தேர்வு நுழைவுச் சீட்டு (Admit Card) மறுக்கப்பட்டதாகவும் சித்ரா சிங் குற்றம் சாட்டினார்.
மேலும், சில வகுப்புத் தோழர்கள் மதிப்பெண்களுக்காக பேராசிரியருக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகவும், தகுதிக்குப் பதில் தனிப்பட்டப் பழக்கத்தின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படுவதாகவும் அவர் விமர்சித்தார்.
View this post on Instagram
தனது மிரட்டலைச் சட்டவிரோதமாகப் பதிவு செய்ததாகவும் கூறிய சித்ரா சிங், “கல்வி என்பது உரிமை, நான் அதற்காக யாசகம் கேட்க மாட்டேன்” என்று கூறி, தனது முதுகலைப் பட்டத்தை விட்டுக் கொடுப்பதாக உணர்ச்சிப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
