தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. முன்னதாக அரசியல் கட்சியினர் பணத்தை கொடுத்து மக்களை கவர்ந்து விடக்கூடாது என்பதற்காக பறக்கும் படையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது கடந்த ஏப்ரல் ஆறாம் தேதி தாம்பரம் ரயில் நிலையத்தில் சோதனை நடத்தியபோது கணக்கில் காட்டப்படாத ரூபாய் 4 கோடி பருமுதல் செய்யப்பட்டது.

இதன் காரணமாக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் ஆதரவாளரான சதீஷ் மற்றும் அவரது தம்பி நவீன், பெருமாள் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பாஜக தலைவர் நயினார் ராகேந்திரனின் தேர்தல் செலவுக்காக இந்த பணம் கொண்டு செல்லப்பட்டதாக தெரிவித்தனர். இதை அவர் திட்டவட்டமாக மறுத்தார். இதையடுத்து இந்த விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் தற்போது தேர்தலின் போது பணப்பட்டுவாடா செய்ய நயினார் நாகேந்திரனுக்கு பாஜக நிர்வாகிகள் எஸ் ஆர் சேகர், கேசவ விநாயகம், கேவர்தன் ஆகியோர் உதவியது உறுதியானது.