அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடைபெற்ற சுற்றுப்பயணத்தில், அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் பேசிய அ.ம.மு. க பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன், நடந்தால் ஊர்வலம். நின்றால் மாநாடு என்ற சொல்லுகின்ற அளவுக்கு தலைவர், அம்மா அவர்களுக்கு தொண்டர்களிடமும், மக்களிடையே செல்வாக்கு இருந்தது. ஆனால் இன்றைக்கு 15 லட்சம் பேரை கூட்டுவோம் என்று,  ஆறு மாதங்களாக மார்தட்டி வந்தவர்களால் 2 லட்சம் பேரைக் கூட அங்கே கொண்டு செல்ல முடியவில்லை.

250 கோடி 300 கோடி செலவு செய்தும் அங்கே தொண்டர்கள் கூட வரவில்லை. காரணம்,  தொண்டர்கள்,  பழனிச்சாமி கட்சியை இன்றைக்கு கபளீகரம் செய்து இருக்கிறார்கள். இரட்டை இலையும்,  கட்சியின் பெயரும் அவர்களிடம் மாட்டிக் கொண்டிருக்கின்ற காரணத்தினால், வேறு  செய்வதறியாது அங்கே அமைதியாக இருக்கிறார்கள். அவர்கள் ஒன்றை உணர வேண்டும்.

அன்றைக்கு நடந்தது மாநாடா ? இரட்டை இலை பழனிசாமியிடம் இருந்தும், இத்தனை பணம் செல்வாக்கு இருந்தும்,  அவர்கள் தமிழகம் முழுவதும் வாகனம் ஏற்பாடு செய்தும் தொண்டர்களை ஏற்றி செல்ல முடியவில்லை. தங்கள் எதிர்ப்பை காட்டி இருக்கிறார்கள். எழுச்சி மாநாடு மதுரையிலே  என்று ஆறு மாத காலமாக அவர்கள் அடித்த கூத்து,  இன்றைக்கு அது ஒரு வீழ்ச்சி மாநாடாகி விட்டது.

காரணம் துரோகம் என்றைக்கும் வெற்றி பெற்றதாக சரித்திரம் இல்லை. சில நாள் ஆட்டம் போடும், துரோகம் நிச்சயம் அழிந்துவிடும். அது ஓய்ந்துவிடும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இன்றைக்கு அண்ணா திமுக மாநாடு இருந்தது என தெரிவித்தார்.