பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியபோது,  ஒரு விதண்டாவாதத்திற்காக…. ஒரு மெச்சூரிட்டி இல்லாம,  காமன் சென்ஸ் இல்லாமல்,  ஒரு அரசு பதவில… முக்கியமான பொறுப்பில் இருக்கிற… மாண்புமிகு அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள்…  ஆளுநர் ரிசைன் பண்ணிட்டு வா போட்டிக்கு போட்டி பாத்துக்கலாம்னு.

அதனால் திமுகவினுடைய இடியாப்ப சிக்கல் என்பது அவர்களாகவே தினமும் புதுசு புதுசா பேசி…  அந்த இடியாப்பத்தை இன்னும் பெருசா ஊத்திட்டு இருக்காங்க. இதுல இருந்து டிஎம்கே வெளியே வர முடியாது. இந்த வருட  நீட் தேர்வு. இந்த வருஷத்தை விட பிரமாதமா இருக்கும். 2025 இன்னும் பிரமாதமா இருக்கும். அதனால் இப்பவும் நான் திமுகவை கேட்பது…

நீட்டை வச்சு நாங்க அரசியல் பண்ணனும்னு சொல்லிட்டு வெளிய வந்ததுன்னா…  அந்த கேம் முடிஞ்சுது. இன்னும் எத்தனை உயிர்களை காவு கொடுக்கப் போறீங்க ? அதனால இது எதுவுமே அரசியல் அமைப்பு சட்டப்படி நடைமுறைக்கு செய்யவே முடியாது. புரிதல் இல்லாமல் ஏதேதோ பேசி இன்னைக்கு டிஃபெண்ட் பண்றதுக்காக என்னென்னமோ திமுக பேசுறாங்க.

இது போகாத ஊருக்கு வழி தேடுவது. போகாத ஊருக்கு உதயநிதி ஸ்டாலின் அவர்களும், ஸ்டாலின் அவர்கள் பாத்தீங்கன்னா….  எஸ்கேப் ஆயிட்டார்.நீட்டை பத்தி அதிகமா பேசுறதில்லை. உதயநிதி கிட்ட கட்டிட்டாரு. ஏனென்றால் அவருக்கு தெரியும். இது நடக்காதுன்னு என தெரிவித்தார்.