சீனாவின் குவாங்டாங் மாகாணம் யங்ஜியாங்கில் உள்ள ஒரு மெடிக்கலில் நடந்த சம்பவம், இணையத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பகுதியில் உள்ள ஒரு நபர், தனக்கென வைத்திருந்த மெடிக்கல் membership கார்டை பயன்படுத்தி, அந்த மெடிக்கலில் இருந்து கருக்கலைப்பு மாத்திரை வாங்கியுள்ளார். அதற்காக செலுத்த வேண்டிய தொகை 200 ரூபாயை, மொபைல் பேமென்ட் கோடு மூலமாக செலுத்தினார். ஆனால், டிரான்சாக்ஷன் payment failed ஆகிவிட்டது.

இதனால், மெடிக்கல் ஸ்டாஃப் அவருக்கு நேரடியாக அழைத்து தகவல் தெரிவிக்க முயற்சித்தனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த அழைப்பை அவரது மனைவி தான் எடுத்துள்ளார். “உங்கள் payment credit ஆகவில்லை, 200 ரூபாயை மீண்டும் அனுப்புங்கள்” என்று மெடிக்கல் ஊழியர் கூறியதும், மனைவிக்குள் சந்தேகம் எழுந்தது. “200 ரூபாய்க்கு என்ன வாங்கினார்?” எனக் கேட்டதற்கு, “கருக்கலைப்பு மாத்திரை வாங்கியுள்ளார்” என பதில் வந்ததோடு, அந்த நபரின் கள்ளக்காதல் மனைவிக்குத் தெரிந்துவிட்டது.

அந்த நபர் இருவரையும் ஏமாற்றியிருப்பது தெரிய வந்த நிலையில், அவரது இரு குடும்பங்களிலும் பெரும் கலகமும், மனவேதனையும் ஏற்பட்டது. தற்போது அவர் இருவரையும் இழக்கும் நிலையில் இருக்கிறார். மேலும், “என் தனிப்பட்ட தகவலை என் மனைவிடம் தெரிவித்ததாக” மெடிக்கல் மீது புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. மெடிக்கல் ஊழியர் அந்த தகவலை திட்டமிட்டு தெரிவித்தாரா, அல்லது தவறுதலாக நடந்ததா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இருப்பினும், தனது தவறுக்கு பிறரை குற்றம்சாட்டுவது நியாயமா என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். “தவறு உன்னுடையதே; உண்மை தெரிய வந்தது மட்டுமே தவறு அல்ல” என சமூக வலைதளங்களில் கருத்துகள் குவிந்து வருகின்றன.