இணையத்தில் தினமும் நூற்றுக்கணக்கான வீடியோக்கள் பரவுகின்றன. ஆனால், சில வீடியோக்கள் மட்டும் பார்வையாளர்களை அதிர்ச்சி அடையச் செய்கின்றன. அப்படிப்பட்ட வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

அதில், ஒருவர் தனது கையில்  மிகப் பெரிய மற்றும் ஆபத்தான டார்த் கேட்டர் எனப்படும் முதலை இனத்தை, ஒரு செல்ல நாயைப் போல சுமந்து கொண்டு மகிழ்ச்சியாக நடமாடுவதை காணலாம். மிகவும் ஆக்ரோஷமான இந்த முதலை மனிதன் கை மடியில் அமைதியாக இருக்க, அந்தக் காட்சி பார்ப்பவர்களை வாயடைத்துப் போகச் செய்துள்ளது.

இந்த வீடியோவில் தெரியும் நபர் கலிபோர்னியாவின் ஃபவுண்டன் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள தி ரெப்டைல் மிருகக்காட்சிசாலையின் நிறுவனர் ஜே ப்ரூவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். ப்ரூவர் சமூக வலைதளங்களில் பிரபலமானவர், குறிப்பாக TikTok மற்றும் Instagram-இல் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளார். ஊர்வன மீதான தனது அன்பையும் ஆர்வத்தையும் அடிக்கடி பகிர்ந்து வரும் அவர், தற்போது முதலையுடன் வெளியான இந்த வீடியோ காரணமாக உலகம் முழுவதும் தலைப்புச் செய்தியாகியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Jay Brewer (@jayprehistoricpets)

“>