
என் மண், என் மக்கள் பாத யாத்திரையில் பேசிய தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை, உங்கள் அன்பை எல்லாம் பெற்று, இன்னைக்கு வரும்பொழுது ஏற்கனவே சொன்னது போல், கடைவீதியில் நிறையா அரிசி கடையை பார்த்து வந்திருக்கிறேன். மனச்சநல்லூர் அரசி IR 60 இங்கிருந்து தமிழ்நாடு முழுவதும் போகும். இன்றைக்கு உண்மையாகவே அரிசி யாரெல்லாம் விளைவிக்கிறார்கள் ? நெல் யாரெல்லாம் விளைவிக்கிறார்கள் ? அவர்கள் கூட நிற்பது நம்முடைய பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்.
நாம் ஆட்சிக்கு வந்த பிறகு நெல்லினுடைய குறைந்தபட்ச ஆதார விலையை மட்டுமே 67% உயர்த்தி இருக்கின்றார். 2014இல் ஒரு குவிண்டால் நெல்லுக்கு எவ்வளவு குறைந்தபட்ச ஆதார விலை இருந்தது ? 2023இல் 9 ஆண்டுகள் கழித்து கணக்கு பார்த்தீர்கள் என்றால், 67 சதவீதம் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை பாரதிய ஜனதா அரசு, பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உயர்த்திருக்கிறார்.
PM கிஷன் சம்மான் நிதி விவசாய பெரு மக்கள் விவசாயம் பண்ண வேண்டும். இளைஞர்களை விவசாயத்தின் பக்கம் இழுக்க வேண்டும். இளைஞர்கள் விவசாயத்தை இலாபகரமாக பார்க்க வேண்டும். அதற்காக நமது பாரத பிரதமர் அவர்கள் 9 ஆண்டுகளில் PM கிஷன் சம்மான் நிதி மூலமாக சிறுகுறு விவசாயிகள் யார் எல்லாம் இருக்கிறார்களோ, அவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக 6,000 ரூபாய் ஒரு வருடத்திற்கு அனுப்பி வைக்கிறார்கள். இது விவசாயத்திற்கான பென்ஷன் என்று நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.
6 ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் தமிழ்நாட்டில் மட்டும் பெறக்கூடிய விவசாய பெருமக்கள் மட்டுமே 46 லட்சம். 46 லட்சம் விவசாய பெருமக்கள் மோடி ஐயாவினுடைய ஆட்சி வந்த பிறகு நேரடியாக… வங்கி கணக்கிருக்கு 6000 ரூபாய் வங்கி கணத்திற்கு வருகிறது. நேற்று முன்தினம் தான் 15 வது தவணையாக… 2000 ரூபாய் உங்களது வங்கி கணக்கிற்கு வந்தது. பயிர் காப்பீட்டு திட்டம்…. 2014 வரை பயிர் காப்பீடு திட்டம் இல்லை.
அதிகமாக மழை பெய்து, நீங்கள் விளைவிக்கக்கூடிய நெல் வரவில்லையா ? அதற்கு பயிர் காப்பீடு திட்டம். ஆடு, மாடுகள் செடியை கடித்து விட்டதா ? பயிர் காப்பீட்டு திட்டம். நமது பாரத பிரதமர் தான் முதல் முதலாக இந்தியாவில் ஆட்சிக்கு வந்த பிறகு விவசாயிகளினுடைய பயிருக்கு காப்பீட்டு திட்டம் கொண்டு வந்தார். தமிழகத்திற்கு மட்டுமே செலவிட்ட நிதி 9 ஆண்டுகளில் 1231 கோடி ரூபாய் விவசாயிகளுக்காக நாம கொடுத்திருக்கிறோம்.
நீர் பாசன மேம்பாட்டத்திற்காக 9 ஆண்டுகளில் கொடுத்திருக்கக்கூடிய நிதி 2961 கோடி ரூபாய். வேலை வாய்ப்பு திட்டத்தில் 65 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் பணம் கொடுத்து இருக்கிறோம். எதற்கு இதையெல்லாம் சொல்லிக்கிறோம் என்றால், இங்கு நிறைய பேர் விவசாயி இல்லை, சில பேர் விவசாயி இருக்கீங்க என தெரிவித்தார்.