தமிழக அரசின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் மாதம் ₹1000 பெற விண்ணப்பித்த பல பெண்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கான முக்கிய அறிவிப்பை உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டுள்ளார்.

மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்து, தகுதி இருந்தும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பெண்கள் இனி கவலைப்படத் தேவையில்லை.

இது குறித்து அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டுள்ள அறிவிப்பில், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பெண்கள் தங்கள் பகுதியில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் (RDO) அலுவலகத்தை அணுகலாம் என்று தெரிவித்துள்ளார்.

அங்கு உங்கள் விண்ணப்பம் ஏன் நிராகரிக்கப்பட்டது என்பதற்கான காரணத்தைச் அதிகாரிகள் விளக்குவார்கள். ஒருவேளை அவர்கள் சொல்லும் காரணம் தவறானது என நீங்கள் கருதினால், அங்கேயே உரிய ஆதாரங்களுடன் நீங்கள் மேல்முறையீடு (Appeal) செய்யலாம். தகுதியான ஒரு பெண் கூட இந்தத் திட்டத்திலிருந்து விடுபடக்கூடாது என்பதே அரசின் நோக்கம் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.”