பிரபல தெலுங்கு இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் போன்றோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்த படம் கடந்த வருடம் ரிலீஸ் ஆகி 1200 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்தது. பல சர்வதேச விருதுகளை குவித்த ஆர்ஆர்ஆர் படம் வெளியாகி ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது.

சமீபத்தில் ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது. இந்நிலையில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் வெளியாகி ஒரு வருடம் நிறைவடைந்ததை படக்குழு தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. படம் ரிலீஸ் ஆகி ஒரு வருடங்கள் நிறைவடைந்தாலும் உலகின் ஒரு சில மூலைகளில் இன்னும் படம் ஹவுஸ்புல்லாக ஓடி கொண்டு இருக்கிறது என்று பதிவிட்டுள்ளனர். மேலும் இந்த பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.