தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் என்ற சீரியலின் மூலம் பிரபலமானவர் நடிகை வாணி போஜன். இந்த சீரியலின் மூலம் கிடைத்த புகழினால் தற்போது வாணி போஜன் வெள்ளி திரையில் நடித்து வருகிறார். நடிகை வாணி போஜன் தற்போது படங்களில் பிஸியாக நடித்துவரும் நிலையில் தன்னை பற்றி வரும் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

அதாவது நடிகை வாணி போஜன் வெள்ளித்திரையில் நடிக்க வந்த புதிதில் டெலிவிஷன் ஆர்டிஸ்ட் மற்றும் டிவி முகம் இவர்கள் எப்படி நடிப்பாங்க என்று அவர் காதுப்படவே கூறி இன்சல்ட் செய்தார்களாம். மேலும் இந்த தகவலை தற்போது நடிகை வாணி போஜன் சமீபத்திய பேட்டிகள் உருக்கமாக கூறியுள்ளார்.