நடிகர் சிம்புவின் பத்து தல படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடிகர் சிம்புவின் பத்து தல படம் பார்க்க ரோகிணி திரையரங்கிற்கு நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த இருவர் வந்திருந்தனர். அப்போது டிக்கெட் இருந்தும் திரையரங்க ஊழியர்கள் அவர்களை உள்ளே செல்ல அனுமதி மறுத்தனர்.

திரையரங்கில் தீண்டாமை கொடுமை என இந்த வீடியோ பரவிய நிலையில், இவ்விவகாரம் நிர்வாக கவனத்திற்கு சென்றது. இதையடுத்து அவர்கள் படம் தொடங்குவதற்கு முன்பே உள்ளே அனுமதிக்கப்பட்டனர் என திரையரங்க உரிமையாளர் நிகிலேஷ் சீர்யா விளக்கமளித்துள்ளார்.

இது தொடர்பாக டுவிட் செய்திருக்கும் இயக்குனர் நவீன், குளிக்காம பல்லுவெளக்காம ஷார்ட்ஸ் போட்டுட்டு வர கூட்டம் உள்ளே போகலாம். லுங்கி கட்டிட்டு கிழிஞ்ச புடவை கட்டிட்டு வந்தா உள்ளே அனுமதி இல்லை. காசு போட்டு டிக்கெட் வாங்கி விட்டுதான் அவர்களும் வருகிறார்கள் என தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.