வானில் அரிய நிகழ்வாக நேற்று முன்தினம் மாலை செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, யுரேனஸ் உள்ளிட்ட 5 கிரகங்கள் ஒரே நேரத்தில் அணிவகுத்தது. சூரிய அஸ்தமனத்துக்கு பின் மேற்கு தொடுவானில் நிலவுக்கு அருகில் இந்த 5 கிரகங்களும் அணிவகுத்தது. இந்த அரிய நிகழ்வானது சில வினாடிகள் நீடித்தது.

இந்நிலையில் ஐந்து கிரகங்கள் அணிவகுத்த வீடியோவை பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார். அதில், என்ன ஒரு அழகான காட்சி. 5 கிரகங்கள் இன்று ஒன்றாக இணைந்து இருக்கிறது. இது அழகான மற்றும் அரிதான காட்சி ஆகும். நீங்களும் இதற்கு சாட்சியாக இருப்பீர்கள் என நம்புகிறேன் என்று குறிப்பிட்டு உள்ளார்.