தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் திரிஷா, பிரியா ஆனந்த், காயத்ரி, பிக் பாஸ் ஜனனி, அர்ஜுன், சஞ்சய் தத், மிஷ்கின், சாண்டி மாஸ்டர், மன்சூர் அலிகான், கதிர், கௌதம் மேனன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். லியோ படத்தில் ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் நடிப்பதால் லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இந்நிலையில் லியோ திரைப்படம் அக்டோபர் 19-ஆம் தேதி ரிலீசாகும் நிலையில் முதல் கட்ட சூட்டிங் காஷ்மீரில் கடும் குளிருக்கு மத்தியில் ஒரு மாத காலமாக நடந்து முடிந்துள்ளது. இதனையடுத்து அடுத்த கட்ட ஷூட்டிங் சென்னையிலும் இறுதி கட்ட ஷூட்டிங் ஹைதராபாத்திலும் நடப்பதாக தகவல் வெளியானது. தற்போது விஜயின் வீட்டில் லியோ படத்தின் சூட்டிங் நடைபெற இருப்பதாக புது தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பது தெரியவில்லை. மேலும் விஜய் வீட்டில் லியோ படத்தின் சூட்டிங் நடைபெற இருப்பதாக வெளிவந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் சற்று ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.