தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் விக்னேஷ் சிவன். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்த நிலையில் கதையில் ஏற்பட்ட சில முரண்பாடு காரணமாக படத்தில் இருந்து விலகினார். நடிகர் அஜித்தின் படத்திலிருந்து விக்னேஷ் சிவன் விலகியது ரசிகர்கள் மத்தியில் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் தல தோனி ரசிகர்களின் இருக்கைக்கு மஞ்சள் நிற பெயிண்ட் அடிக்கும் வீடியோ ஒன்று அண்மையில் இணையத்தில் வெளியானது.

இது தொடர்பான புகைப்படத்தை தற்போது விக்னேஷ் சிவன் தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரியில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வரும் நிலையில் தல மீது இந்த மனுஷனுக்கு எம்புட்டு பாசம் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள். மேலும் நடிகர் அஜித் படத்திலிருந்து நீக்கினாலும் அவரின் மீதும் இன்னும் அன்பாகத்தான் இருக்கிறார் விக்னேஷ் சிவன். அண்மையில் அஜித்தின் தந்தை மறைவுக்கு கூட விக்னேஷ் சிவன் இரங்கல் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.