மணிப்பூரில் கடந்த ஒரு மாத காலமாக கலவரம் நடந்து வருகிறது. மெய்தெய் என்ற சமூகத்தினரை பழங்குடியினருடன் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில் மெய்தெய் சமூகத்தினர் மற்றும் குக்கி சமூகத்தினர் இடையே மோதல் வெடித்துள்ளது. மாநிலம் முழுவதும் கல்வீச்சு தாக்குதல், தீவைத்தல் போன்ற சம்பவங்கள் அரங்கேறி வருவதால் பல பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக  ஒரு லிட்டர் பெட்ரோல் 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று கலவரத்தின் போது மூடப்பட்ட மருந்து கடைகளும் இதுவரை திறக்கப்படாததோடு வெளியூர்களிலிருந்து மாநிலத்திற்குள் மருந்துகளையும் கொண்டுவர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இதனால் மக்கள் மருந்து பொருட்களை பெற முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.