செய்தியாளர்களிடம் பேசிய பழ. கருப்பையா, தமிழ்நாட்டில் இத்தனை கட்சியில் இருக்கும் நிலையில் நீங்கள் ஏன் புதிய கட்சி தொடங்குகிறீர்கள் என்று கேட்கின்றார்கள். அதற்கு நான் சரியான விடை சொல்கிறேன். இந்த பக்கம் 12 கட்சி…  அந்த பக்கம் ஒரு 7, 8 கட்சி எல்லாம் கூட்டணியாக இருக்கிறது. எப்போதாவது  ஆளுங்கட்சியை பற்றி…  அவர்கள் செய்கின்ற அட்டூழியங்களை பற்றி…  இந்த கூட்டணி கட்சிகள் பேசுகின்றனவா ?

1967இல் கூட்டணி அரசை  ராஜாஜி தான் தொடங்கி வைத்தார். தனக்கு நேர்மாறான அண்ணாவை ஆட்சியில் அமர்த்தினார். பூணூலை பிடித்துக் கொண்டு ஓட்டு போடுங்கள் என்று சொல்லி ஆட்சியில் அமர்த்தினார். மூன்றாவது நாள் வெளியே வந்து, அண்ணாவின் ஆட்சியை விமர்சனம் செய்தார் ராஜாஜி. தனி கட்சி இருக்கிறது அவர்களுக்கு….  நீ என்ன அந்த கட்சியினுடைய கிளை கட்சியா ? பிறகு உங்கள் அரசியலை நீ நடத்த வேண்டாமா ? அவர்கள் தனியாக நடத்தினார்கள்.

இன்றைக்கு கூட்டணி கட்சிகள் எல்லாம் முதல் ஐந்தாண்டு, அடுத்த ஐந்தாண்டு, அடுத்த ஐந்து ஆண்டு…. எல்லாவற்றிலும் அவர்கள் சொல்வதற்கு தலையாட்டி கொண்டு..  கூடவே இருந்தால் நான் கேட்கிறேன்…  தனி கட்சி உனக்கு எதற்கு ? தனி கொடி உனக்கு எதற்கு ?  ஆகவே நீங்கள் ஒரு பக்கமாக 12 கட்சிகளும் அவனுக்கு சார்பாக இருக்கிறீர்கள்.

இந்த பக்கம் ஒரு 7, 8 கட்சிகள் இன்னொருவனுக்கு சார்பாக இருக்கிறீங்க.  இப்படிப்பட்ட நிலையில் உண்மையை வெளியே கொண்டு வருவதற்கு இந்த அரசியல் பயன்படாது என்ற காரணத்தினால் தான், நான்  அரசியல் செய்ய வேண்டும் என்று விருப்பத்தின் அடிப்படையில் தமிழ்நாடு தன்னுரிமை கழகம் மிகச் சிறந்த உணர்வாளர்களால் தோற்றுவிக்கப்பட்டது என தெரிவித்தார்.