செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், சாதாரண ஏழை – எளிய மக்கள் வீடு மனைக்கு பட்டா  கேட்டா….  ரெண்டு செண்டு,  ஒன்றை செண்டு  பட்டா குடுங்கன்னு சொன்னா…. நூறு வருஷமா குடியிருந்தால் கூட, பட்டா கொடுக்குற நிலைமை என்பது இல்லை.

பொறம்போக்கு நிலம் என்கின்ற முறையில், மக்களை வெளியேற்றி… வீடுகளை இடிச்சி… தினம் தினம் நூற்றுக்கணக்கான வீடுகளை இடித்து வெளியேறுகின்ற நடவடிக்கை என்பது தமிழ்நாட்டில் நடந்து கொண்டே இருக்கிறது.நீர்நிலை புறம்போக்கு என சொல்றாங்க… வேற இடம் என சொல்றாங்க….  எங்களுக்கு அந்த இடம் தேவைப்படுதுங்கிறாங்க….

நான் என்ன கேட்கிறேன் ? இப்படி அன்றாடம் காட்சிகளாக இருக்கக்கூடிய…. தினக்கூலி தொழிலாக இருக்கக்கூடியவர்களுடைய வீடுகளை தான் நீங்க இடிக்க முடியுமா ? அரசியல் செல்வாக்குள்ளவர்களுடைய வீடுகளை  எல்லாம் நீங்க ஏன் இடிக்க மாட்டேங்குறீங்க ? கைது பண்ண  மாட்டேங்குறீங்க ?  சட்ட வரம்புகளை மீறி….

ஒரு இடத்துல நத்தம் புறம்போக்கு என இருக்கு. நத்தம் புறம்போக்கு இடத்துக்கு வீட்டு மனை பட்டா தான் கொடுக்கலாம். ஆனால் அதை பெரிய வணிக வளாகத்துக்கு பட்டா குடுக்குறீங்க…  எப்படி வரம்பு மீறி உங்களுக்கு பட்டா கொடுக்க முடியுது ? யார் அதுக்கு பின்னாடி இருக்கிறவங்க ? அந்த அரசு அதிகாரிகள் என்பது அரசு ஏன் நடவடிக்கை எடுக்க மறுக்கிறது ?

எனவே அந்த நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில்… வரம்புகளை மீறி அரசு சொத்துக்களை அனுபவித்துக் கொண்டிருக்கிற ஆக்கிரமிப்பாளர்கள்  மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு துணை போய் இருக்கின்ற அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நான் வற்புறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

ஒவ்வொரு நாளும் பாஜகவைக்கு சவக்குழிக்குள் அனுப்பக்கூடிய வேலையை தான் அண்ணாமலை செய்து கொண்டிருக்கிறார் என்பது நன்றாக தெரியும். இப்படிப்பட்ட அண்ணாமலை வழிநெடுகிலும் எதையோ பேசுவது என்கின்ற பெயரில் பெனாத்திக் கொண்டு வருகிறார். அவர் ஒரு அரசியல் முதிர்ச்சியான தலைவர் இல்லை என்பதை அவருடைய பேட்டியில் இருந்து நன்றாக தெரிகிறது என தெரிவித்தார்.