ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ரெகுநாதபுரத்தில் பன்னடுக்கு உவர்நீர் மீன் வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் சென்னையில் உள்ள மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம் சார்பில் மத்திய உயிரியல் தொழில்நுட்ப துறை நிதி உதவியுடன்
ஒருங்கிணைந்து செயல்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் ரெகுநாதபுரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையில் உள்ள மாணவர்களுக்கு இந்தியாவின் வளர்ச்சியில் மீன் வளத்தின் பங்கு என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் 30 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு தலைமை ஆசிரியை  பரிசு வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார். இதற்கான ஏற்பாடுகளை திட்ட இணை அலுவலர் ஜெயபவித்ரன், களப்பணியாளர் தேவநாதன் ஆகியோர் செய்திருந்தனர்.