அரியலூர் மாவட்டத்தில் உள்ள த.சோழங்குறிச்சி கிராமத்தில் செல்வராசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அட்சயா(18) என்ற மகள் இருந்துள்ளார். இவர் சென்னையில் இருக்கும் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் விடுமுறையை முன்னிட்டு வீட்டிற்கு வந்த அட்சயா நேற்று முன்தினம் கடைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்டார். ஆனால் அவர் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அட்சயாவை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனாலும் அவரை கண்டுபிடிக்க இயலவில்லை. இதுகுறித்து செல்வராசு உடையார்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் அட்சயாவை தேடி வருகின்றனர்.