இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் தான் நடிகர் ரஜினிகாந்த். இவர் இப்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ரஜினி நடிப்பில் கடந்த 2014 ஆம் வருடம் 3d அனிமேஷன் படமாக வெளியாகிய கோச்சடையான் குறித்த முக்கிய தகவலை இசைப்புயல் ஏஆர் ரகுமான் வெளியிட்டுள்ளார்.

அதன்படி, சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் பல்வேறு முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்து 3டி அனிமேஷனாக வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. எனினும் இப்படத்தில் ஏஆர் ரகுமான் இசையமைப்பில் இடம்பெற்றிருந்த பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் கோச்சடையான் படத்தின் ஒரிஜினல் பேக்ரவுண்ட் மியூசிக்கை நீண்ட வருடங்களுக்கு பின் ஏஆர் ரகுமான் தன் சமூகவலைதளப்பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். இந்த சவுண்ட் டிரக் இப்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாக பரவி வருகிறது.