நடிகர் ஜெயம் ரவியின் கோமாளி படத்தின் வாயிலாக இயக்குனராக அறிமுகமானவர் தான் பிரதீப் ரங்கநாதன். இந்த படத்தின் வெற்றியை அடுத்து பிரதீப் ரங்கநாதன் இயக்கி, கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் லவ் டுடே. கடந்த வருடம் சிறிய பட்ஜெட் படமாக வெளியாகிய லவ் டுடே ப்ளாக் பஸ்டர் ஹிட்டடித்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வசூல் வேட்டை நடத்தியது.

இந்த படம் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த நிலையில் லவ் டுடே படம் இந்தியில் ரீமேக் செய்யப்போவதாகவும், அதன் உரிமையை Phantom films நிறுவனம் வாங்கியுள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதை தமிழில் லவ் டுடே படத்தை தயாரித்த அர்ச்சனா கல்பாதி அவர்கள் தன் டுவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். அதோடு இப்படத்தின் படக்குழு குறித்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் எனவும் கூறி இருக்கிறார். இத்தகவல் தற்போது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது..