தமிழில் விஜய், அஜித், சூர்யா உட்பட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் தான் தமன்னா. அதிலும் குறிப்பாக பாகுபலி படம் இந்திய அளவில் இவருக்கு புகழை தந்தது. இப்போது தமன்னா ரஜினியுடன் இணைந்து “ஜெயிலர்” படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் சூட்டிங் சென்னையில் மும்முரமாக நடந்து வருகிறது. நெல்சன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் பல பிரபல நடிகர்கள் இணைந்து நடித்து வருகின்றனர்.

இதற்கிடையே தமன்னா எப்போதுமே உடலை சீராக வைத்துக்கொள்வதில் கவனமாக இருப்பார். இவர் தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வருகிறார். இந்நிலையில் குர்துண்ட சீதாகாலம் பட நடிகை தமன்னாவின் உடற்பயிற்சி வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதனை தொடர்ந்து நம்ம நடிகை தமன்னாவின் அழகுக்கு உடற் பயிற்சி தான் காரணம் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

https://twitter.com/Tamannaahspeakk/status/1627686656219443200?s=20