உக்ரைன் ரஷ்யா போரானது ஒரு வருடத்தை கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றன. மேலும் அந்நாடுகள் உக்ரைனுக்கு தேவையான ஆயுத உதவிகள் ராணுவ உதவிகளை வழங்குவதோடு ரஷ்யாவிற்கு எதிராக பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளது.

இந்த நிலையில் உக்ரைனுக்கு தேவையான புதிய ராணுவ உதவி குறித்து இன்று அறிவிப்பு வெளியாகும் என வெள்ளை மாளிகை தெரிவித்து இருந்தது. இது குறித்து வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி கூறியதாவது “புதிய இராணுவ உதவியின் மதிப்பு இன்னும் தயார் செய்யப்படவில்லை. இந்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்” என்று அவர் கூறியுள்ளார்.