இந்தோனேசியா நாட்டில் அமைந்துள்ள இந்திய பெருங்கடல் பகுதியில் நேற்று மீனவர்கள் தங்களுடைய படகுகளில் மீன் பிடிக்க சென்றனர். அந்த சமயத்தில் பலத்த காற்று வீசியதோடு அலையின் வேகமும் அதிகரித்துள்ளது. இதனால் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் உடனடியாக கரையை அடையுமாறு அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
அவ்வாறு திரும்பும் படகுகளில் ஒரு படகு மட்டும் அதிக அலையின் காரணமாக கடலில் கவிழ்ந்தது. இந்தப் படகில் மொத்தம் பத்து பேர் பயணித்துள்ளனர். அவர்களில் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். மேலும் மீதமுள்ள 9 பேரும் காணாமல் போயுள்ளனர். அவர்களை மீட்கும் பணிகளில் மீட்பு குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகின்றது.