அமெரிக்க நாட்டின் வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் ஆவார். இவர் ஜி 20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேற்று இந்தியா வந்துள்ளார். அப்போது அவர் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை நேரில் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்தும் உலகத்தில் நடக்கும் பிரச்சினைகள் குறித்தும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் கூறியதாவது “உக்ரைன் ரஷ்யா போரில் சீனா ரஷ்யாவிற்கு ஆதரவளித்ததோடு ரஷ்யாவுக்கு உதவும் எண்ணதோடு செயல்பட்டு வருகின்றது. நான் சீனாவின் மூத்த வெளியுறவு கொள்கை அதிகாரியை வாங் யியை சந்தித்தேன்.

அப்போது அவரிடம் ரஷ்யாவிற்கு ஆயுதங்களை வழங்குவதற்கு சீனா பரிசீலித்து வருகின்ற தகவல் எங்களுக்கு கவலையை அளிக்கின்றது. மேலும் இது இருதரப்பு உறவில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். அதோடு விளைவுகள் கடும் மோசமானதாக இருக்கும் என எச்சரிக்கை விடுத்தேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.