CBSE பள்ளிகளில் படித்த 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என தேர்வு வாரிய அதிகாரி சாஹா தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், தேர்வு முடிவுகள் மற்றும் அறிவிப்பு பணிகளில் CBSE வாரியம் ஈடுபட்டு வருவதால், முடிவுகளை எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கலாம் என்றும் அறிவிப்புக்கான சரியான தேதியை இப்போது அறிவிக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.