சென்னை மாநகராட்சிக்கு முனிசிபல் சட்டம் 1919-ன் பல பிரிவுகளில் வணிகத்தின் வகைப்பாட்டுக்கு ஏற்றவாறு பல்வேறு வணிகங்களுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த உரிமங்கள் ஒவ்வொரு நிதியாண்டிற்கும் வழங்கப்பட்டு அடுத்து வரும் நிதியாண்டில் புதுப்பிக்கப்பட வேண்டும். இந்நிலையில் 2023-24 நிதியாண்டிற்கு புதுப்பிக்கப்பட வேண்டிய உரிமங்களை முகாம்கள் மற்றும் மண்டல அலுவலகங்கள் மூலமாக புதுப்பித்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது.

தற்போது பெருநகர சென்னை மாநகராட்சியின் www.chennaicorporation.gov.in மற்றும் “க்யூ ஆர் கோடு” மூலம் உரிமங்களை புதுப்பித்து கொள்ளலாம். மேலும் வணிகர்கள் தொழில் உரிமங்களை மார்ச் 3-ஆம் தேதிக்குள் புதுப்பித்து கொள்ளுமாறும், ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் உரிமம் புதுப்பிக்க தவறியவர்கள் மீது பெருநகர சென்னை மாநகராட்சி விதியின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.