புதுச்சேரியில் கடந்த  மார்ச் 13 ஆம் தேதி ரூ.11,000 கோடிக்கான முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் மகளிர் மேம்பாட்டிற்காக ரூ.1,330 கோடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார். இந்நிலையில் சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி விதவை உதவித்தொகையை ரூ.2,500-ல் இருந்து ரூ.3,000 ஆக உயர்த்தி அறிவித்தார்.

மேலும் தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் அனைத்து பெண்களும் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். பட்ஜெட்டில் பட்டியலின பெண்கள் மட்டும் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அனைத்து பெண்களும் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.