தமிழ்நாட்டின் நிதிநிலை படிப்படியாக சீரடைந்து வருவதாகவும், இனி புதிதாக கடன் வாங்க தேவையில்லை எனவும் நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசி இருக்கிறார். டெல்லியில் சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழ்நாட்டிற்கு கொடுக்க வேண்டிய மத்திய அரசின் நிதி பங்கீடு குறைந்து கொண்டே வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு ரூ.25,000 கோடி குறைத்துள்ளது” என்று அவர் கூறினார்.