தற்போது திருமணங்கள் பதிவு செய்யும்போது சாட்சிகள் என்று ஒரு சில நண்பர்கள் இருந்தாலே போதும். ஆனால் இனிவரும் காலங்களில் காதல் திருமணத்தில் பெற்றோர்களின் கையெழுத்தை கட்டாயமாக்க வேண்டும் என்று குஜராத் மாநில எம்எல்ஏக்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். காதல் திருமணங்களுக்கு பெற்றோரின் கையெழுத்தை கட்டாயமாக்க வேண்டும் என குஜராத் சட்டமன்றத்தில் எம்எல்ஏக்கள் கோரிக்கை வைத்திருக்கின்றனர்.

காதல் திருமணங்கள் தான் பல குற்ற சம்பவங்களுக்கு ஆதாரமாக இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இப்படி கையெழுத்தை கட்டாயமாக்குவதன் வாயிலாக 50 சதவீதம் குற்றங்களை தடுக்க முடியும் என்று சட்டமன்ற உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.