இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சமூக ஊடகங்களில் மூழ்கியுள்ளனர். இதில் சிலர் இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற ஊடகங்களில் தனக்கென்று ஒரு கணக்கை தொடங்கி ரீல்ஸ் செய்து வருகின்றனர். இவ்வாறு ரீல்ஸ் செய்து தனது வீடியோவை பப்ளிக்காக போஸ்ட் செய்து மக்களால் வெகுவாக கவரப்பட்டு தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொள்கின்றனர்.

அதோடு இவர்களுக்கு திரையுலகில் நுழைய அதிக அளவில் வாய்ப்பு கிடைக்கின்றது. அந்த வகையில் இன்ஸ்டாகிராமில் ஏற்கனவே 90 வினாடிகளுக்கு வரும் ரீல்ஸ் தற்போது 3 நிமிடங்களாக மெட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதாவது அமெரிக்காவில் டிக் டாக் செயலியை தடை செய்யப்பட்டதால், அதிலிருந்து வெளிவரும் பயனர்களை கவரும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.