உலக நன்கொடையாளர் 2024 ஆம் ஆண்டுக்கான பட்டியலை ஈடல்கிவ் ஹூருன் வெளியிட்டது. இந்த பட்டியல் கடந்த மார்ச் மாதம் 2024 வரை முடிவடைந்த ஆண்டிற்கான பட்டியல். இதில் ஹெச்.சி.எல் நிறுவனத்தின் நிறுவனரான சிவ நாடார்(79) குடும்பம் 2153 ரூபாய் நன்கொடையாக அளித்து முதலிடத்தில் உள்ளது. சிவ நாடார் குடும்பத்தினர் கடந்த 5 வருடங்களாக ஈடல்கிவ் ஹூருன் பட்டியலில் முதல் இடத்தை தக்க வைத்து வருகின்றனர். பட்டியலின் விவரங்கள் பின்வருமாறு, முகேஷ் அம்பானி குடும்பத்தினர் 407 கோடி நன்கொடை அளித்து இரண்டாவது இடத்தை பிடித்துள்ளனர்.
பஜாஜ் குடும்பத்தினர் 352 கோடி நன்கொடை அளித்து மூன்றாவது இடத்தை பிடித்துள்ளனர்.கவுதம் அதானி குடும்பம் ரூ.330 கோடி அளித்துள்ளனர், நந்தன் நிலேகனி ரூ.307 கோடி நன்கொடையும், கிருஷ்ணா சிவுகுலா ரூ.228 கோடி நன்கொடையும், அனில் அகர்வால் குடும்பம் ரூ.181 கோடி நன்கொடையும்சுஷ்மிதா மற்றும் சுப்ரடோ பக்ஷி ரூ. 179 கோடி நன்கொடையும், ரோகிணி நிலேகனி ரூ.154 கோடி ஆகியோரும் வழங்கியுள்ளனர். இந்த பட்டியலில் 203 பேர் இடம் பெற்றுள்ளது. இதில் 96 பேர் புதிய நன்கொடையாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு 55 சதவீதம் அதிகமான நன்கொடை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.