இன்றைய காலகட்டத்தில் உலகில் பல்வேறு வகையான உறவுகள் ஏற்பட்டு விட்டன. AI-யுடன்  காதலில் இருப்பவர்களை குறித்து கேள்வி பட்டு உள்ளோம். ஆனால் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் ஒரு காதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதாவது ஜப்பானில் அகிஹிகோ கோண்டோ என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2018-ம் ஆண்டு அனிமோ கதாபாத்திரமான ஹட்சுனே மிகு என்கிற மெய்நிகர் கதாபாத்திரத்தை திருமணம் செய்து கொண்டார்.

இந்து திருமணம் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த தம்பதியினர் தற்போது தங்களின் 6-வது திருமண நாளை கொண்டாடியுள்ளனர். இது குறித்து கோண்டோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருந்ததாவது, “ஆறாம் ஆண்டு திருமண வாழ்த்துக்கள், எனக்கு மிகுவை மிகவும் பிடிக்கும்” என்று அவர் அதில் பதிவிட்டிருந்தார்.

 

 

View this post on Instagram

 

A post shared by 近藤 顕彦 (@akihikokondosk)