வெனிசுலாவின் வட-மத்திய பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. வெறும் 40 வினாடிகளுக்குள் அடுத்தடுத்து இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன; முதலில் ரிக்டர் அளவில் 7.1 ஆகவும், அதனைத் தொடர்ந்து 7.5 ஆகவும் மிகக் கடுமையான அதிர்வுகள் பதிவாகியுள்ளன.
இந்த நிலநடுக்கத்தால் பல அடுக்குமாடி கட்டிடங்கள் சீட்டுக்கட்டுகளைப் போல சரிந்து விழுந்துள்ளன. கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் ஏராளமான மக்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மேலும், இந்த நிலநடுக்கத்தின் பாதிப்பால் சுமார் 10,000 பேர் வரை உயிரிழந்திருக்கக் கூடும் என்ற அதிர்ச்சியூட்டும் தகவலும் வெளியாகியுள்ளது.
Additional footage of major damage in Caracas, Venezuela following 7.1 magnitude earthquake. https://t.co/d3PPvcJyo5
— AZ Intel (@AZ_Intel_) June 24, 2026
“>
மேலும் நிலநடுக்கத்தின் போது வீதிகள் எங்கும் கட்டிட இடிபாடுகளும் தூசிகளும் சூழ்ந்ததால், மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள செல்லப்பிராணிகளுடன் பயந்து ஓடும் பதைபதைக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. வெனிசுலா மட்டுமின்றி, இதன் அதிர்வுகள் அண்டை நாடான கொலம்பியாவின் தலைநகர் பொகோட்டாவிலும் உணரப்பட்டுள்ளது.
அதோடு பல நகரங்களில் மின்சாரம் மற்றும் இணைய சேவைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதால், உள்ளூர் நிர்வாகம் அவசரநிலையை பிரகடனப்படுத்தியுள்ளது. தற்போது பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புக்குழுவினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
