தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக அரசு விவசாயிகள் மற்றும் மகளிர் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் வளர்ச்சி பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி மகளிர் உரிமை தொகை குறித்து அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்டுள்ள தகுதியான பெண்கள் விண்ணப்பங்கள் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரும் 45 நாட்களுக்குள் செயலாக்கப்படும் என தெரிவித்தார். மேலும் பேசிய அவர் திமுக ஆட்சியில் மக்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருவதாக கூறியுள்ளார்.