இணையத்தில் ஒரு ரெட்டிட் (Redditor) பயனர் பகிர்ந்த செய்தி, பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இவர் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் 20 ரூபாய் மதிப்புள்ள ‘மஞ்ச்’ (Munch) சாக்லேட் பார் ஒன்றை வாங்கியுள்ளார்.
அந்தச் சாக்லேட் கவரில், ‘பிளேஸ்டேஷன் 5 ஸ்லிம்’ (PS5 Slim) வெல்லும் வாய்ப்பு குறித்த அறிவிப்பைக் கண்ட அந்த நபர், சாதாரணமாக அதிலுள்ள தனிப்பட்ட குறியீட்டை (Unique Code) இணையதளத்தில் பதிவிட்டுள்ளார்.
குறியீட்டைப் பதிவிட்டு மூன்று நாட்களுக்குப் பிறகு, அந்த ரெட்டிட் பயனருக்கு ‘பிஎஸ்5 ஸ்லிம்’ கன்சோலை வென்றுவிட்டதாகச் செய்தி வந்துள்ளது.
ஆரம்பத்தில் அதை மோசடி (Scam) என்று நம்ப மறுத்த அந்த நபர், டெலிவரி ஐடி வந்த பிறகுதான் உண்மையிலேயே அதிர்ஷ்டம் அடித்துள்ளது என்பதை உணர்ந்துள்ளார்.
மத்தியதரக் குடும்பத்தைச் சேர்ந்ததாகவும், பிளேஸ்டேஷன் வைத்து விளையாட வேண்டும் என்பது சிறுவயதுக் கனவு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வளவு பெரிய பரிசை எளிதாக வென்றதால், நெட்டிசன்கள் அவரைப் “பகவானின் (கடவுளின்) செல்லப்பிள்ளை” (God’s Favourite Child) என்று பாராட்டி வருகின்றனர்.
