சமூக வலைத்தளங்களில் ஒரு பெட்ரோல் பங்கில் நடந்த வேடிக்கையான விபத்து குறித்த வீடியோ ஒன்று வைரலாகி உள்ளது. சாலையில் சாதாரணமாகச் சென்று கொண்டிருந்த மூன்று பள்ளிச் சீருடை அணிந்த மாணவிகள், ஒரு ஸ்கூட்டியில் பெட்ரோல் பங்கிற்குள் வேகமாக நுழைந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து, நேராக பெட்ரோல் இயந்திரத்தில் மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

ஸ்கூட்டி பெட்ரோல் இயந்திரத்தில் மோதிய வேகத்தில், அருகிலிருந்த பெண் ஊழியர் அலறிக்கொண்டு ஓட, மற்ற ஊழியர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

மாணவிகள் ஸ்கூட்டியைச் சமாளிக்க முயன்றும், ஸ்கூட்டி ஒருபுறமும், மாணவிகள் மறுபுறமுமாகச் சறுக்கி விழுந்தனர். இந்தச் சம்பவத்தைக் கண்ட இணையவாசிகள், “அவள் ஒரு பெண்; எதையும் செய்வாள்” என்று வேடிக்கையாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மூன்று மாணவிகள் ஒரே ஸ்கூட்டியில் வந்தது, அவர்களது கட்டுப்பாடு இல்லாமை மற்றும் திடீர் மோதல் ஆகியவை இணைந்து இந்த வீடியோவை இணையத்தின் புதிய பொழுதுபோக்காக மாற்றிவிட்டன.