சிகாகோவில் அதிர்ச்சியும், நகைச்சுவையும் கலந்த வண்ணமாக நடந்த ஒரு சம்பவம், இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஷ்வின் அவசராலா (வயது 40), தனது மனைவி ஜாஸ்மின் குவாங் (வயது 41) அவர்களுடன் மருத்துவமனைக்கு செல்வதற்குள், கார் உள்ளேயே திடீரென தங்களுடைய இரண்டாவது பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.

காலை 5 மணிக்கு லேசான வலிகளுடன் எழுந்த ஜாஸ்மின், அவை சாதாரணம் என்று எண்ணி உதாசீனமாக இருந்தார். ஆனால் காலை 8.30 மணி அளவில் அவர்கள் மருத்துவமனைக்கு புறப்பட்டபோது, மிகுந்த வலியால் ஜாஸ்மின் “ஏதோ வந்துகொண்டிருக்கிறது” என்று கத்தினார்.

 

View this post on Instagram

 

A post shared by Jasmine Kwong (@jasminekwongsoman)

அதிர்ச்சியடைந்த அஷ்வின், கார் நிறுத்தி, என்ன நடக்கிறது என்று பார்ப்பதற்காக முன்னால் நின்றார். குழந்தையின் தலை வெளியே வந்ததை உணர்ந்த அவர், மிகவும் நிதானமாகக் குழந்தையை கை கொண்டு இழுத்து எடுத்தார்.

இந்த அதிரடியான சம்பவம் மிசிகன் அவென்யூ அருகே, டிரிப்யூன் டவேர்ஸ் பகுதியில் நடந்துள்ளது. உடனடியாக 911-ஐ அழைத்த அஷ்வின், உடனே பராமரிப்பு குழுவினரை வரவழைத்தார்.

பிறகு தாய் மற்றும் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அந்தப் பாப்பா 24 மணி நேரம் ஆக்ஸிஜன் மற்றும் IV மூலம் கண்காணிப்பில் வைக்கப்பட்டு, 3 நாட்களில் சுகமாக வீடு திரும்பினார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, அஷ்வினின் தைரியம் மற்றும் தன்னம்பிக்கைக்குத் பாராட்டுகள் குவிந்துள்ளன. ‘நம்ப முடியாத சம்பவம், ஆனால் சிரிக்க வைத்த நிகழ்வு’ என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.