ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வளவனூர் கிராமத்தில் விவசாயியான கார்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கல்பனா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 1/2 வயதில் ஆண் குழந்தை இருக்கிறது. தற்போது கல்பனா 6 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் திடீரென கல்பனாவுக்கு வலிப்பு ஏற்பட்டதால் அவரை புதுபாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதனையடுத்து கல்பனா மேல் சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே கல்பனா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.