ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் உர்பி ஜாவேத். இவர் தான் அணியும் வித்தியாசமான உடைகளால் மிகவும் பிரபலமாக இருக்கிறார். உர்பி தான் அணியும் கவர்ச்சி ஆடைகளால் அடிக்கடி ட்ரோல் செய்யப்படுவார். இந்நிலையில் ஒரு பேட்டியில் உர்பி ஜாவேத் சிறுவயதில் தான் அனுபவித்த கொடுமைகள் குறித்து கண்ணீர் மல்க பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, எனக்கு 15 வயது இருக்கும் போது என்னுடைய புகைப்படத்தை யாரோ ஆபாச வலைதளத்தில் வெளியிட்டு விட்டனர்.

ஆனால் அது நார்மலான புகைப்படம் தான். நான் அந்த சமயத்தில் டாப்ஸ் மேல் ஓவர் கோட் அணியாமல் வெளியே கூட செல்ல மாட்டேன். ஆனால் என்னுடைய தந்தை ஆபாச தளத்தில் என் புகைப்படம் வந்ததை அறிந்து என்னை பெல்டால் அடித்தார். அதன் பிறகு என்னை ஆபாச நடிகை எனக்கூறி என் தந்தை சித்திரவதை செய்ததோடு ஒரு படத்திற்கு 50 லட்சம் கொடுக்குறாங்கலாமே நீ எவ்வளவு வாங்குகிறாய் என கேட்டு டார்ச்சர் செய்தார். 2 வருடங்களாக என் தந்தை செய்த டார்ச்சரை சகித்துக் கொண்டேன். அதன் பிறகு தற்கொலை செய்யலாம் என முடிவெடுத்தேன்.

ஆனால் அதையும் என்னால் சரிவர செய்ய முடியவில்லை. இதனால்தான் எனக்கு 17 வயது இருக்கும் போது வீட்டை விட்டு வெளியேறி மும்பைக்கு வந்தேன். நான் லக்னோவை சேர்ந்தவள். மும்பைக்கு வந்த புதிதில் சின்னத்திரை சீரியல்களில் நடிக்க வாய்ப்பு தேடி அலைந்தேன். அப்போதுதான் பிக் பாஸில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் என் வாழ்க்கை மாறும் என்று நினைத்தேன். ஆனால் ஒரே வாரத்தில் எலிமினேட் செய்யப்பட்டேன். ஆனால் நான் இந்த அளவுக்கு பிரபலமானதற்கு அந்த ஒரு வார பிக்பாஸ் நிகழ்ச்சி தான் காரணம் என உர்பி கூறியுள்ளார். மேலும் இணையதளத்தில் முகம் தெரியாத நபர்கள் விமர்சிப்பதை பற்றி நான் கவலைப்பட மாட்டேன். என் விருப்பத்தின் பெயர்தான் நான் உடைகளை அணிகிறேன் என்று கூறினார்.