சென்னை மாவட்டத்தில் உள்ள கொடுங்கையூர் வெங்கடேஸ்வரா நகர் 2-வது குறுக்கு தெருவில் அபிபா பர்கின் (23) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு விக்ரம் என்பவருடன் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கணவன், மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது.
கடந்த ஏப்ரல் மாதம் 17-ஆம் தேதி கொடுங்கையூரில் இருக்கும் அம்மா வீட்டிற்கு சென்ற அபிபா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இளம் பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.