விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வேட்டைக்காரன் பட்டி கிராமத்தில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் வளர்மதி அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அதே கிராமத்தில் வசிக்கும் சந்தோஷ்குமார் என்பவர் தன்னை காதலிக்குமாறு சிறுமியை வற்புறுத்தி உள்ளார்.
இதனால் மன உளைச்சலில் சிறுமி தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வளர்மதி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.