சென்னை மாவட்டத்தில் உள்ள வேளச்சேரியில் குணசீலன்(33) என்பவர் வசித்து வருகிறார். இவர் தான் குடியிருந்த வீட்டு உரிமையாளரின் மகளான 13 வயது சிறுமியை டியூஷனுக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றுள்ளார். இதனையடுத்து பெற்றோருக்கு தெரியாமல் சிறுமியை திரையரங்கு, ஷாப்பிங் மால் என அழைத்து சென்று குணசீலன் நட்பாக பழகி வந்துள்ளார். கடந்த 2020-ஆம் ஆண்டு சிறுமிக்கு செல்போனில் ஆபாச வீடியோக்களை காண்பித்து சிறுமியையும் ஆபாசமாக படம், வீடியோ எடுத்துள்ளார்.

இதனையடுத்து ஆபாச வீடியோக்களை குணசீலன் சிறுமிக்கு அனுப்பி மிரட்டியுள்ளார். இதனால் அச்சத்தில் சிறுமி தனது வீட்டு குளியலறையில் தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் குணசீலனை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் குணசீலனுக்கு ஆயுள் தண்டனையும், 3 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.