சென்னை மாவட்டத்தில் உள்ள பம்மல் வ.உ.சி நகரில் பட்டதாரியான பசிலத்காத்தூன்(34) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இவருக்கு அதே பகுதியில் வசிக்கும் ஜமீல் அகமது(36) என்பருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு 2 வயது மற்றும் ஐந்து மாதத்தில் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். நேற்று முன்தினம் இரவு பசிலத்காத்தூன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக பசிலத்காத்தூனின் தாய் ஹாசீனா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரில் இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்ததால் ஜமீல் அகமதுவும், அவரது தாய் சகிலாவும் இணைந்து பசிலத்காத்தூனை அடித்து உதைத்து கொடுமைப்படுத்தி உள்ளனர். இதனையடுத்து ஜமீல் அகமது வாங்கிய 20 லட்ச ரூபாய் கடனை அடைப்பதற்காக எங்களிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்தார். எனவே ஜமீல் அகமது, சகிலா ஆகிய இரண்டு பேரும் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.