புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள எம்.ராசியமங்கலம் கிராமத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூமிகா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் வீட்டிலிருந்த பூமிகா திடீரென காணாமல் போய்விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் பூமிகாவை கண்டுபிடிக்க இயலவில்லை.

இதுகுறித்து செல்வராஜ் ஆலங்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் பூமிகாவை யாராவது கடத்தி சென்றார்களா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.