திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பழைய பேட்டை சர்தார் புரத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அன்ன பாக்கியம் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் அன்ன பாக்கியம் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது அதே பகுதியில் வசிக்கும் டேவிட் என்பவர் அன்ன பாக்கியத்திடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டார்.

அப்போது அன்ன பாக்கியம் தண்ணீர் கொடுக்க மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த டேவிட் அவரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதுகுறித்து அன்னபாக்கியம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் டேவிட்டை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.