கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் பகுதியில் 17 வயது சிறுவன் வசித்து வருகிறான். இந்த சிறுவன் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த சிறுமி தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இது குறித்து பெற்றோருக்கு தெரிந்தால் பிரச்சினை ஏற்படும் என நினைத்து சிறுமி கர்பத்தை கலைக்க முயற்சி செய்ததாக தெரிகிறது.

இதனால் சிறுமிக்கு அதிக அளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சிறுவனை கைது செய்தனர்.