தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மேல்காடு கிராமத்தில் லாரி டிரைவரான கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தவமணி(32) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் தவமணிக்கும் அவரது மாமியாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அவர்களை கோவிந்தராஜ் சமாதானம் செய்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று மீண்டும் தகராறு ஏற்பட்டதால் தவமணி வீட்டை விட்டு வெளியேறினார்.

இதனால் அதிர்ச்சியடைந்த கோவிந்தராஜ் தனது மனைவியை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். ஆனாலும் அவரை கண்டுபிடிக்க இயலவில்லை. இதுகுறித்து கோவிந்தராஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தவமணியை தேடி வருகின்றனர்.