தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஆணகுண்டு பகுதியில் விவசாயியான மாரிமுத்து(61) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சொந்த வேலை காரணமாக காரில் நல்லம்பள்ளிக்கு சென்று விட்டு மீண்டும் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் சாமி செட்டிபட்டி மயானம் அருகே சென்ற போது தர்மபுரி நோக்கி சென்ற அரசு டவுன் பேருந்து எதிர்பாராதவிதமாக கார் மீது மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த மாரிமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுபற்றி அறிந்த போலீசார் அங்கு சென்று மாரிமுத்துவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
