விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் இருந்து முதலிப்பட்டி செல்லும் சாலையில் 50 வயது மதிக்கத்தக்க நபரின் சடலம் கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்குபதிவு செய்த போலீசார் சடலமாக மீட்க்கப்பட்ட நபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? அவர் எப்படி இறந்தார்? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.